/* */

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான்

கோவை மாநகர காவல்துறை சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர், பொதுமக்கள் பங்கேற்றனர்.

HIGHLIGHTS

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான்
X

கோவை மாநகர காவல்துறை சார்பில் சாலை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. நேரு ஸ்டேடியத்தில் தொடங்கிய இந்த மாரத்தான் போட்டியை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்து பொதுமக்களுடன் இணைந்து மாரத்தான் போட்டியில் பங்கேற்றார்.

இந்த மாரத்தானானது அவிநாசி ரோடு வழியாக வ.உ.சி மைதானம் வரை 5 கி.மீ. நடைபெற்றது. இதில் போக்குவரத்து துணை ஆணையர் மதிவாணன், துணை ஆணையர் சிலம்பரசன் உதவி ஆணையர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதேபோன்று கோவை பாலக்காடு ரோடு குனியமுத்தூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. மாரத்தான் ஓட்டம் பாலக்காடு ரோடு இடையர்பாளையம் பிரிவில் இருந்து கோவைப்புதூர் பிரிவு வரை நடைபெற்றது.

மாரத்தான் ஓட்டத்தை தெற்கு காவல் உதவி ஆணையர் ரகுபதி ராஜா சாலை பாதுகாப்பு குறித்த பேசினார். அதனை தொடர்ந்து ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில் குனியமுத்தூர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் தெய்வசிகாமணி, குற்றப்பிரிவு ஆய்வாளர் பாஸ்கரன், உதவி ஆய்வாளர் பாஸ்கரன், சிறப்பு உதவி ஆய்வாளர் பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். உக்கடம் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் முதல் இடத்தை பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

சாலை பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு இன்று கோவை மாநகர காவல் நிலையங்கள் அனைத்திலும் மாரத்தான் போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Updated On: 16 Jan 2023 3:14 PM GMT

Related News

Latest News

  1. ஒட்டன்சத்திரம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் மூன்று மடங்கு உயர்ந்த எலுமிச்சை...
  2. சோழவந்தான்
    மதுரை அருகே எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழாவில் வழங்கப்பட்ட...
  3. திருப்பரங்குன்றம்
    மதுரை உலக அன்னையர் தின விழாவில் நடந்த உணவு வழங்கல் நிகழ்ச்சி
  4. காஞ்சிபுரம்
    ‘எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அதிமுக இயங்கும்’- செங்கோட்டையன்
  5. லைஃப்ஸ்டைல்
    அக்கா உன் மகிழ்ச்சியான வாழ்க்கை எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி..!
  6. வீடியோ
    போதை பொருள் விற்பனையை தடுக்க வேண்டியது யார் ? #drugmafia #drugs #dmk...
  7. நாமக்கல்
    வெள்ளாளப்பட்டி பகவதியம்மன் தேர் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
  8. காஞ்சிபுரம்
    மூன்றே மாதம்தான் பயணியர் நிழற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்தது...!
  9. வீடியோ
    அரசியலை தொழிலாக செய்யும் அரசியல்வாதிகள் !போதை பொருள் தொழிலா? #public...
  10. வீடியோ
    திராவிட மாடலை காரி துப்பும் சாமானியர் ! #dmk #mkstalin #public...