புதர் மண்டியுள்ள ராஜவாய்க்கால்களை தூர்வார கோரிக்கை

புதர் மண்டியுள்ள ராஜவாய்க்கால்களை தூர்வார கோரிக்கை
X

ஆகாயத்தாமரை சூழ்ந்து கிடக்கும் ராஜவாய்க்கால்

கோவையில் புதர் சூழ்ந்த ராஜவாய்க்கால்களால் குளங்களுக்கு நீர் செல்ல முடியாத சூழல் உள்ளதால், உடனடியாக தூர்வார சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

கோவை மாவட்டத்தில் ஏராளமான குளங்கள் உள்ளன. இதில் நொய்யல் ஆற்றின் வழித்தடத்தில் மட்டும் 24 பெரிய குளங்கள் இருக்கின்றன. நொய்யல் ஆற்றில் இருந்து குளங்களுக்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால்கள் ராஜவாய்க்கால்கள் என்று அழைக்கப்படுகிறது.

பருவமழைக்காலங்களில் நொய்யல் ஆற்றில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடும்போது ராஜவாய்க்கால்கள் மூலம் குளங்களுக்கு மழைநீர் திருப்பி விடப்படும். தற்போது ராஜவாய்க்கால்கள் புதர்கள் சூழ்ந்து உள்ளதுடன், ஆகாய தாமரைகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் பருவமழைக்காலத்தில் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும், குளங்களுக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது.

வெள்ளலூர் குளத்திற்கு தண்ணீர் செல்லும் ராஜவாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால், 15 ஆண்டுகள் கழித்து நிரம்பியது.

தற்போது மீண்டும் அந்த ராஜவாய்க்காலில் ஆகாய தாமரைகள் வளர்ந்துள்ளதுடன், ஆங்காங்கே மண் சரிந்து காணப்படுகிறது. இதேபோன்று ஆச்சான் குளம், குறிச்சி குளம், சொட்டையாண்டி குட்டை உள்ளிட்ட குளங்களுக்கு செல்லும் ராஜவாய்க்கால்களில் புதர்கள் படர்ந்து காணப்படுகிறது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தன்னார்வலர்கள் உதவியுடன் குறிச்சி குளத்திற்கு செல்லும் ராஜவாய்க்கால் தூர்வாரப்பட்டது. தற்போது மீண்டும் புதர்கள் வளர்ந்து உள்ளது.

இதற்கிடையில் நரசாம்பதி குளம், வேடப்பட்டி புதுக்குளம், கோளராம்பதி குளம், பேரூர் பெரிய குளம், சொட்டையான்டி குட்டை, செங்குளம் உள்ளிட்ட குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.

விரைவில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன், ராஜவாய்க்கால்களை தூர்வாரினால் மட்டுமே குளங்களில் தண்ணீர சேமிக்க முடியும். எனவே, ராஜவைக்கால்களில் உள்ள ஆகாயத்தாமரையை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறையை சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்

Tags

Next Story
ai in future education