கோவை- ராமேஸ்வரம் ரயில் ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்படும்.. ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு…

கோவை- ராமேஸ்வரம் ரயில் ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்படும்.. ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு…
X

சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம். (கோப்பு படம்).

கோவை- ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் ரயில் ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், கோவையில் இருந்து ராமேஸ்வரம் வரை இயக்கப்படும் ரயில் தற்போது ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தெற்கு ரயில்வே சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:

கோவை-ராமேஸ்வரம் இடையே ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாம்பன் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதால், கோவை ராமேஸ்வரம் இடையே இயக்கப்பட்டு வரும் ரயில்கள் ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

மோசமான வானிலை காரணமாக பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கோவை ராமேஸ்வரம் இடையே செல்லும் ரயில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. வழக்கமாக இயக்கப்படும் கோவை- ராமேஸ்வரம் (வண்டி எண்: 16617) வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 7.45 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும். ஆனால், அந்த ரயில் கோவையில் இருந்து ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்படும். ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் வரை இயக்கப்படாது.

இதேபோன்று, ராமேஸ்வரத்தில் இருந்து கோவை இடையே இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்-16617)ராமேஸ்வரத்தில் இருந்து நாளை மறுநாள் (புதன்கிழமை) இரவு 7.10 மணிக்கு புறப்படுவது வழக்கம். ஆனால் அந்த ரயில் ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டு கோவைக்கு வரும். ராமேஸ்வரத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு இயக்கப்பட மாட்டாதுய

இந்த அறிவிப்பை பயணிகள் முழுமையாக கவனித்துக் கொள்ள வேண்டும். இதுதொடர்பாக பயணிகள் மேலும் உதவிக்கு ராமேஸ்வரம் மற்றும் மண்டபத்தில் உள்ள பயணிகள் மையத்தை 9360548465, 9360544307 ஆகிய ஹெல்ப்லைன் எண்களை தொடர்பு கொள்ளலாம் என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!