தேயிலை தோட்டத்தில் குட்டியுடன் தூங்கும் காட்டு யானைகள்: பொதுமக்கள் அச்சம்
தேயிலை தோட்டத்தில் குட்டிகளுடன் முகாமிட்டுள்ள யானைகள் - ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட படம்
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை மற்றும் மானா ம்பள்ளி ஆகிய வனச்சரக ங்களில் சுமார் 60-க்கும் மேற்பட்ட காட்டு யானை கள் உள்ளன. அவை தற்போது அடிக்கடி ஊரு க்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்நிலையில் வால்பாறை அடுத்த புதுதோட்டம், கருமலை, அக்கா மலை, சின்னக்கல்லார், சிறுகுன்றா, நல்லமுடி பூஞ்சோலை, பன்னிமேடு, சேக்கள்முடி, உருளிகல் ஆகிய எஸ்டேட் பகுதியில் தற்போது காட்டு யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டு உள்ளதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
எனவே வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகத்தின் வேட்டை தடுப்பு காவலர்கள் டிரோன் கேமரா மூலம் யானைகள் பதுங்கி உள்ளதாக கூறப்படும் பகுதிகளில் தீவிரமாக ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டனர்.
அப்போது நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் உள்ள ஒரு தேயிலை தோட்டத்துக்குள் சுமார் 15 காட்டு யானைகள் குட்டி யுடன் படுத்து தூங்குவது தெரியவந்தது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். தொடர்ந்து வனத்துறை ஊழியர்கள் எஸ்டேட் பகுதிகளில் குட்டிகளுடன் முகாமிட்டு உள்ள காட்டு யானைகளை அடர்ந்த பகுதிக்கு விரட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகின்ற னர்.
வால்பாறை பகுதியில் காட்டு யானைகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீடுகளை சேதப்படு த்துகின்றன. பின்னர் விளைநிலங்களுக்குள் புகு ந்து அங்கு விளையும் பயிர்களையும் நாசப்படுத்தி வருகின்றன.
அவை இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு களை சேதப்படுத்துகிறது. பகல்நேரங்களில் தேயிலைத் தோட்டத்தில் சுற்றி வருகிறது.
எனவே தேயிலை தோட்டங்களில் தஞ்சம் புகுந்து உள்ள காட்டு யானைகளை உடனடியாக காட்டுக்குள் விரட்ட வேண்டும் என அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu