ஆர்.எஸ்.புரம் சாலையில் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ஆர். எஸ் புரம் சாலை
கோவையில் உள்ள பிரதான சாலைகளில் ஆர்.எஸ்.புரம் -டிபி ரோடு முக்கியமானது. இது சுக்ரவார்பேட்டை மூன்று கம்பத்தில் தொடங்கி, டி.பி.ரோடு, கவ்லி பிரவுன் சாலை வரை நீண்டு செல்கிறது.
இங்கு சீனிவாச ராகவன் வீதி, சுப்பிரமணியன் ரோடு, வெங்கடகிருஷ்ணன் ரோடு, அருணாச்சலம் ரோடு, ராமலிங்கம் ரோடு, ஆரோக்கியசாமி சாலை, சம்பந்தம் ரோடு, லோகமானிய வீதி, பொன்னுரங்கம் வீதி, வெங்கடசாமி ரோடு, பெரியசாமி ரோடு, பாசிய காரலூரோடு உள்பட எண்ணற்ற குறுக்கு சாலைகள் உள்ளன.
இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அப்போது குறுக்கு சாலையில் இருந்து வரும் வாகனங்கள், அதிவேகமாக டிபி சாலையில் திரும்புகிறது. அப்படி திரும்பும் போது அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மீது உரசக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் அங்கு தினமும் விபத்துக்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
டிபி சாலையில் இருந்து குறுக்கு சாலை நோக்கி திரும்பும் இடங்களில் வேகத்தடைகள் அமைத்தால் விபத்துகளை தடுக்க முடியும். எனவே பெரிய அளவில் விபத்து நடப்பதற்கு முன்பாக, இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu