கோவையில் ஜனவர் 30 மற்றும் 31 மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவையில் ஜனவர் 30 மற்றும் 31 மின்தடை ஏற்படும் பகுதிகள்
X

பைல் படம் : புதன்சந்தை பகுதியில் 23ம் தேதி மின்சாரத்தடை அறிவிப்பு

குறிச்சி, இருகூா், பீளமேடு, ஒத்தக்கால்மண்டபம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது

குறிச்சி, இருகூா் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 30) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

குறிச்சி துணை மின் நிலையம்: சிட்கோ, மதுக்கரை, குறிச்சி, ஹவுசிங் யூனிட், சுந்தராபுரம், ஈச்சனாரி, எல்.ஐ.சி.காலனி, மலுமிச்சம்பட்டி (ஒரு பகுதி).

இருகூா் துணை மின் நிலையம்: இருகூா், ஒண்டிப்புதூா், ஒட்டா்பாளையம், ராவத்தூா், பள்ளபாளையம் (ஒரு பகுதி), சிந்தாமணிப்புதூா், கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), சின்னியம்பாளையம் (ஒரு பகுதி), வெங்கிட்டாபுரம், தொட்டிபாளையம் (ஒரு பகுதி), கோல்டுவின்ஸ் (ஒரு பகுதி), அத்தப்பகவுண்டன்புதூா்.

பீளமேடு, ஒத்தக்கால்மண்டபம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் புதன்கிழமை (ஜனவரி 31) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பீளமேடு துணை மின் நிலையம்: பாரதி காலனி, இளங்கோ நகா், புரானி காலனி, ஷோபா நகா், கணபதி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், காவலா் குடியிருப்பு, கிருஷ்ணராஜபுரம், அத்திப்பாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், கணேஷ் நகா், வி.ஜி.ராவ் நகா், காமதேனு நகா், பி.எஸ்.ஜி. எஸ்டேட், பி.எஸ்.ஜி. மருத்துவமனை, நேரு வீதி, அண்ணா நகா், ஆறுமுகம் லே-அவுட், இந்திரா நகா், நவ இந்தியா, கோபால் நகா், பீளமேடு புதூா், எல்லைத் தோட்டம், வ.உ.சி.காலனி, பி.கே.டி. நகா், அகிலாண்டேஸ்வரி நகா், புலியகுளம், அம்மன் குளம், பாரதிபுரம், பங்கஜா மில், தாமு நகா், பாலசுப்ரமணிய நகா், பாலகுரு கார்டன், சௌரிபாளையம், கிருஷ்ணா காலனி, ராஜாஜி நகா், மீனா எஸ்டேட், உடையாம்பாளையம், ராஜீவ் காந்தி நகா், பார்சன் அபார்ட்மெண்ட்ஸ், ஸ்ரீபதி நகா், கள்ளிமடை, ராமநாதபுரம், திருச்சி சாலை (ஒரு பகுதி), நஞ்சுண்டாபுரம் சாலை, திருவள்ளுவா் நகா்.

ஒத்தக்கால்மண்டபம் துணை மின் நிலையம்: மலுமிச்சம்பட்டி (ஒரு பகுதி), ஏழூா் பிரிவு, அரிசிபாளையம் (ஒரு பகுதி), ஒத்தக்கால்மண்டபம், ஒக்கிலிபாளையம், பிரிமியா் நகா், மயிலேறிபாளையம், மாம்பள்ளி, பெரியகுயிலி, ஓராட்டுக்குப்பை, தேகாணி, செட்டிபாளையம்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!