மாதாந்திர பராமரிப்பு பணிகள் கோவையில் மின்தடை
கோயம்புத்தூரில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக இரண்டு நாட்களுக்கு பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
16-ம் தேதி வெள்ளிக்கிழமை
கோவை இருகூர் துணை மின்நிலையத்தில் நாளை (16-ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், ராவத்தூர், பள்ளப்பாளைத்தின் ஒரு பகுதி, சிந்தாமணிப்புதூர், கண்ணம்பாளையத்தின் ஒரு பகுதி, சின்னியம்பாளையத்தின் ஒருபகுதி, வெங்கடாபுரம், தொட்டிபாளையத்தின் ஒருபகுதி, கோல்டுவின்சின் ஒருபகுதி, அத்தப்பக்கவுண்டன்புதூர் ஆகிய இடங்கில் மின்விநியோகம் இருக்காது.
இதேபோல சோமனூர், காளிபாளையம், கருமத்தம்பட்டி, இளச்சிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. எனவே சோமனூர், கிருஷ்ணாபுரம், சாமளாபுரம், ராமாட்சிபாளையம், தொட்டிபாளையம், செந்தில் நகர், பரமசிவன்பாளையம், கணியூரின் ஒரு பகுதி, ராயர்பாளையம், கருமத்தம்பட்டி 4 ரோடு, தண்ணீர்பந்தல், செகுடந்தாளி, இளச்சிபாளையம், பள்ளிபாளையத்தின் ஒருபகுதி, அய்யம்பாளையத்தின் ஒருபகுதி ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடைபடும்.
17-ம் தேதி சனிக்கிழமை
கோவை டாடாபாத் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 17-ம் தேதி நடக்கிறது. எனவே மேட்டுப்பாளையம் சாலை, அழகேசன் ரோட்டின் ஒரு பகுதி, நாராயணகுரு ரோடு, சாய்பாபா காலனி, மனையியல் கல்லூரி, வனக்கல்லூரி, முருகன் மில்ஸ், என்.எஸ்.ஆர் ரோட்டின் ஒரு பகுதி, பாரதி பார்க் கிராஸ், ராஜாஅண்ணாமலை ரோடு, சென்ட்ரல் திரையரங்கம், திவான்பகதூர் சாலையின் ஒரு பகுதி, பூ மார்க்கெட், பட்டேல் சாலை, காளீஸ்வரா நகர், செல்லப்பகவுண்டர் சாலை, சி.எஸ்.டபிள்யூ மில்ஸ், ரங்கேகவுண்டர் சாலை, சுக்கர்வார்பேட், மரக்கடை, தெப்பக்குளம் ரோடு, சித்தாபுதூர், பாலசுந்தரம் சாலை, புதியவர் நகர பகுதி, ஆவராம்பாளையம் பகுதி, டாடாபாத், அழகப்பசெட்டியார் சாலை, 100 அடி சாலை, சிவானந்தா காலனி, அட்கோ காலனி, அலமு நகர் ஆகிய பகுதிகளில் வருகிற காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
சூலூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக சூலூர், பி.எஸ்.நகர், டி.எம்.நகர், கண்ணம்பாளையம், ரங்கநாதபுரம், காங்கேயம்பாளையம், எம்.ஜி.புதூர், ராவத்தூர் ஆகிய பகுதிகளில் வருகிற 17-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் தடைபடும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu