கோவை மாவட்டத்தில் 11 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு
தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு
பொங்கல் பண்டிகைக்கு அரிசி குடும்ப அட்டைதாரா்கள், இலங்கைத் தமிழா்கள் முகாம்களில் உள்ளவர்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, சா்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ரூ.1,000 பணம் பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கூட்டுறவுத் துறை சார்பில் நியாய விலைக் கடைகள் மூலம் இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது. கோவை மாவட்டத்தில் 11 லட்சத்து 888 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது.
இது தொடா்பாக கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கூறுகையில், கோவை மாவட்டத்தில் 10 லட்சத்து 99 ஆயிரத்து 799 அரிசி குடும்ப அட்டைதாரா்களும், இலங்கைத் தமிழா்கள் முகாமில் 1,089 குடும்பங்களும் உள்ளனா். மாவட்டத்தில் அரிசி குடும்ப அட்டைதாரா்கள், முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழா் குடும்பங்கள் என மொத்தம் 11 லட்சத்து 888 குடும்பங்களுக்கு ரூ.1000 பணம் உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.
இதற்கென கோயம்புத்தூர் மாவட்டத்துக்கு ரூ.110 கோடியே 88 லட்சத்து 8 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர தலா 11 லட்சத்து 888 கிலோ பச்சரிசி, சா்க்கரை, கரும்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெறுவதற்கான டோக்கன்கள் ஜனவரி 3 முதல் 8ஆம் தேதி வரை பயனாளிகளுக்கு வழங்கப்படும். இதனைத் தொடா்ந்து டோக்கன் வரிசை அடிப்படையில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படும் என்று கூறினர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu