ஆனைமலை புலிகள் காப்பகத்தில், இன்று துவங்கிய யானைகள் கணக்கெடுப்பு பணி

ஆனைமலை புலிகள் காப்பகத்தில், இன்று துவங்கிய யானைகள் கணக்கெடுப்பு பணி
X

Tirupur News. Tirupur News Today- ஆனைமலை புலிகள் காப்பகத்தில், யானைகள் கணக்கெடுப்பு பணி இன்று துவங்கியது.  

Tirupur News. Tirupur News Today-ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுப்பு பணி இன்று துவங்கியது; வரும் 19ம் தேதி இப்பணி நடக்கிறது.

Tirupur News. Tirupur News Today - திருப்பூர் மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில், யானைகள் கணக்கெடுப்பு பணி இன்று துவங்கியது.

ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்திய அளவில் நடந்து வருகிறது. அதன்படி தென்னிந்தியாவில் கோவா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி இன்று (புதன்கிழமை) முதல் 19-ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி ஆகிய நான்கு வன சரகங்கள் உள்ளன. இந்த பகுதிகளில், யானைகள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. இந்த யானைகள் கணக்கெடுப்பு பணியில் 34 குழுக்கள் ஈடுபட்டுள்ளன. 102 வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள்,வனச்சரக அலுவலர்கள் மற்றும் வனக்காப்பாளர்கள் ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பூர் வனக்கோட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுகளிலும் இந்த கணக்கெடுப்பு பணி நடக்க உள்ளது. நாளை பிளாக் கவுண்ட் முறையில் சுற்றுகளில் 15 கிலோமீட்டர் நடந்து சென்று நேரடியாக தென்படும் யானைகள் கணக்கீடு செய்யப்பட உள்ளது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) 2 கிலோமீட்டர் நேர்கோட்டுப் பாதையில் நடந்து யானைகளின் சாணம் மூலமாக மறைமுக கணக்கெடுப்பு பணி நடக்க உள்ளது.

வருகிற 19-ம் தேதி நீர்நிலைகளுக்கு அருகில் இருந்து நேரடி முறையில் யானைகளின் எண்ணிக்கை கணக்கீடு செய்யப்பட உள்ளது. முன்னதாக, இதற்கான பயிற்சி வகுப்பு திருப்பூர் வனக்கோட்ட உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குனர் கணேஷ்ராம் தலைமையில் நடந்தது. உடுமலையில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் நடந்த பயிற்சி வகுப்பில், கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளும் களப்பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் மற்றும் தரவு சேகரிப்பு புத்தகம் வழங்கப்பட்டது. இதில் உடுமலை, அமராவதி, கொழுமம் வந்தரவு வனச்சரக அலுவலர்கள் உயிரியலாளர் மகேஷ்குமார், வனவர்கள், வனக்காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா