பொள்ளாச்சி: வழக்கு பதியாமல் இருக்க லஞ்சம் பெற்ற சிறப்பு எஸ்.ஐ. சஸ்பெண்ட்

பொள்ளாச்சி: வழக்கு பதியாமல் இருக்க லஞ்சம் பெற்ற  சிறப்பு எஸ்.ஐ. சஸ்பெண்ட்
X

பணியிடைநீக்கம் செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் ஏசுபாலன்

பொள்ளாச்சி அருகே நெகமத்தில், சூதாட்டம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க, 7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற, சிறப்பு உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த நெகமம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக ஏசுபாலன் என்பவர் பணியாற்றி வந்தார். இவருக்கு, சில தினங்களுக்கு முன்பு மெட்டுபாவி கிராமத்தில் சிலர் சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில், சூதாடியவர்களை சுற்றிவளைத்து பிடித்துள்ளார். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ரூபாய் 7 ஆயிரத்து லஞ்சமாக பெற்றுள்ளார். இதுகுறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினத்திற்கு புகார் சென்றுள்ளது.

லஞ்சம் பெற்ற புகார் குறித்து விசாரித்த போது வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க சிறப்பு உதவி ஆய்வாளர் ஏசுபாலன் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஏசுபாலனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவிட்டார்.

Tags

Next Story
ai marketing future