பழங்குடியின மாணவர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி எஸ்எப்ஐ ஆர்ப்பாட்டம்

பழங்குடியின மாணவர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி எஸ்எப்ஐ ஆர்ப்பாட்டம்
X

இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு பழங்குடியின மாணவ மாணவிகள் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு பழங்குடியின மாணவ மாணவிகள் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர். மனுவில் பழங்குடியின மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு உடனடியாக ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும், வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளுக்கு பேருந்து வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும், பொள்ளாச்சி அரசு கல்லூரியை விரிவுபடுத்தி அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர். மேலும் குடியிருப்புகளுக்கு மின்வசதி மற்றும் ஆழியாறு மற்றும் ஆனைமலை பகுதிகளில் புதிய உண்டு உறைவிடப்பள்ளி துவக்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா