பொள்ளாச்சி: கேஸ் விலைஉயர்வை கண்டித்து மாதர் சங்கத்தினர் நூதன போராட்டம்

பொள்ளாச்சி: கேஸ் விலைஉயர்வை கண்டித்து மாதர் சங்கத்தினர் நூதன போராட்டம்
X

கேஸ் விலை உயர்வை கண்டித்து, பொள்ளாச்சியில் போராட்டம் நடத்திய மாதர் சங்கத்தினர்.

பொள்ளாச்சியில், கேஸ் விலை உயர்வை கண்டித்து மாதர் சங்கத்தினர் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மத்திய தொலைத் தொடர்பு அலுவலகம் முன்பு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், இன்று போராட்டம் நடைபெற்றது.

இதில், கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராதிகா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கேஸ் சிலிண்டர் வைத்து கொட்டும் மழையிலும் பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் பேசிய மாவட்ட செயலாளர் ராதிகா, தொடர்ந்து கேஸ் விலை உயர்வால் வங்கியில் மானியத் தொகை வழங்கப்படவில்லை என்றும், விலைவாசி அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டினார். கேஸ் சிலிண்டர் விலையை, மத்திய அரசு உடனடியாக குறைக்க வேண்டும் என, அவர் வலியுறுத்தினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!