வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர், பெண் உடல் கருகி பலி
பொள்ளாச்சி அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒரு பெண்ணுடன் உடல் கருகி இறந்தார்.
சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் சபரிநாத் (வயது 4O ). இவரது சொந்த ஊர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியாகும். ஆய்வாளர் சபரிநாத் சென்னையில் பணிபுரிந்து வந்தாலும் அவ்வப்போது தனது சொந்த ஊருக்கு வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இவரது மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை குறைவால் மரணம் அடைந்ததை தொடர்ந்து சொந்த வீட்டில் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டிருந்தார். அதில் சாந்தி (30)என்ற பெண் குடியிருந்து வந்தார். சபரிநாத் அடிக்கடி சொந்த ஊருக்கு வந்து தனது வீட்டில் தங்கி இருந்து விட்டு செல்வது உண்டு. அந்தவகையில் அவர் சொந்த ஊருக்கு வந்து தனது வீட்டில் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை அவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இதில் இன்ஸ்பெக்டர் சபரிநாத் உடல் கருகி பரிதாபமாக இறந்தார். சாந்தி என்ற பெண்ணும் உயிரிழந்து உள்ளார். சாந்தி வீட்டில் வைத்திருந்த பிரிட்ஜ் வெடித்து இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக வீட்டை தீப்பிடித்து இரண்டு பேரும் பலியானதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் உண்மையிலேயே ஃப்ரிட்ஜ் வெடித்து தான் இருந்தார்களா அல்லது வேறு ஏதும் காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மர்ம இறப்பு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu