திதி கொடுக்க சென்றவர்களை தேனீ கொட்டியதில் ஒருவர் பலி : 13 பேர் காயம்

திதி கொடுக்க சென்றவர்களை தேனீ கொட்டியதில் ஒருவர் பலி : 13 பேர் காயம்
X

பலியான ரமேஷ்.

தேனீ கூட்டில் புகைபட்டவுடன் கூடு கலைந்ததால் தேனீக் கூட்டம் ரமேஷின் குடும்பத்தார் மீது கொட்டியது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே குரும்பபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் அப்பகுதியில் கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த சில தினங்கள் முன்பு அவரது பாட்டி காலமாகியுள்ளார். இதையடுத்து இன்று 16ம் நாள் ஈமா காரியம் செய்ய குடும்பத்தினருடன் அம்பாரபாளையம் பகுதி ஆற்றின் கரையோரம் ஓமாம் குண்டம் வளர்த்தி உள்ளனர். அப்போது எதிர்பாரவிதமாக காற்றில் புகை பரவி உள்ளது. பாறையின் மேலே தேனீ கூட்டில் புகைபட்டவுடன் கூடு கலைந்ததால் தேனீக் கூட்டம் ரமேஷின் குடும்பத்தார் மீது கொட்டியது.

தேனி கொட்டியதால் குடும்பத்தார் கலைந்து ஓடியுள்ளனர். அருகில் திதி கொடுத்த நபர்கள் மீதும் தேனீ கொட்டியது. தேனி கொட்டியதால் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய போலீசார் தேனீ கொட்டிய 13 பேரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா