குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு தடை

குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு தடை
X

குரங்கு அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்.

தொடர் மழை காரணமாக பொள்ளாச்சி ஆழியார் குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியார் அருகே அமைந்துள்ளது குரங்கு அருவி. வால்பாறை, சின்னக்கல்லார் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழைநீர் குரங்கு அருவி வழியாக கொட்டி ஆழியார் அணையில் சென்று சேர்கிறது. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவியில் குளித்து மகிழ உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி பல்வேறு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குரங்கு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதிலும் கடந்த இரு நாட்களாக அருவியல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!