பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு
X

பைல் படம்.

Child Kidnapped- பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியைச் சேர்ந்த யூனிஸ், திவ்யபாரதி தம்பதியின் குழந்தை கடத்தப்பட்டது.

Child Kidnapped- பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் யூனிஸ். கூலித்தொழிலாளி. இவரது மனைவி திவ்யபாரதி. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த 27-ம் தேதி திவ்யபாரதிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை கணவர் யூனிஸ் பிரசவத்திற்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் திவ்யபாரதியை அனுமதித்தார். அங்கு அவருக்கு 29-ம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து திவ்யபாரதி தனது குழந்தையுடன் டாக்டர்கள் கண்காணிப்பில் இருந்தார். உதவிக்காக அவரது கணவரும் உடன் தங்கி இருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திவ்யபாரதி மற்றும் அவரது கணவர் சாப்பிட்டு விட்டு குழந்தையின் அருகே தூங்கினர். நேற்று அதிகாலை திவ்யபாரதி எழுந்து குழந்தை படுத்திருந்த தொட்டிலை பார்த்தார். அப்போது தொட்டிலில் படுத்திருந்த குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சியான அவர் தனது கணவரை எழுப்பி தகவல் தெரிவித்தார். இதையடுத்து 2 பேரும் தங்களது குழந்தையை தேடி அலைந்தனர். ஆனால் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.

இவர்கள் தூங்கிய நேரத்தில் வார்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையை கடத்திச் சென்றுள்ளனர். குழந்தையை காணாததால் திவ்யபாரதி கதறி அழுதார். இது அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து பொள்ளாச்சி போலீசில் புகார் கொடுத்தனர். உடனடியாக போலீசார் மருத்துவமனைக்கு வந்து குழந்தையின் பெற்றோர் மற்றும் பணியில் இருந்த நர்சுகளிடம் விசாரணை மேற்கொண்டனர். 6 தனிப்படைகளை அமைத்து குழந்தையை தேடி வந்தனர்.

இந்நிலையில், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் பெண் ஒருவரை கேரளாவில் கைது செய்தனர். மருத்துவமனையில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்