கேரளாவுக்கு கடத்த இருந்த 3 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

கேரளாவுக்கு கடத்த இருந்த 3 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்
X

குட்கா உடன் கைது செய்யப்பட்ட ஜவகர்.

3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 405 கிலோ குட்காவையும், கடத்தலுக்கு பயன்படுத்திய டாடா ஏஸ் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

கோவையை அடுத்த செட்டிபாளையம் பைபாஸ் ரோடு அருகே இருந்து டாடா ஏஸ் வாகனம் மூலம் அதிகளவிலான குட்கா கேரளாவுக்கு கடத்தி செல்ல இருப்பதாக பொள்ளாச்சி சிறப்பு தனிப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கோவை மாவட்டம் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில், பொள்ளாச்சி துணைக் கண்காணிப்பாளர் செல்வி தமிழ்மணி அறிவுறுத்தலின்படி சிறப்பு தனிப்பிரிவு போலீசார் பாலக்காடு ரோட்டில் தீவிர வாகன கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த டாடா ஏஸ் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா இருப்பது தெரியவந்தது. 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 405 கிலோ குட்காவையும், கடத்தலுக்கு பயன்படுத்திய டாடா ஏஸ் வாகனத்தை பறிமுதல் செய்த சிறப்பு தனிப்பிரிவு போலீசார், குட்கா கடத்தி வந்த மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த ஜவகர் என்கிற சபரீசன் என்பவரை கைது செய்தனர். டெம்போ டிரைவர் மற்றும் உரிமையாளரான சபரீசனையும், குட்காவையும் சிறப்பு தனிப்பிரிவு போலீசார் மேற்கு போலீசில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story