பழங்குடிகளின் குடிசைகளை அகற்றிய வனத்துறை: பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பழங்குடிகளின் குடிசைகளை அகற்றிய வனத்துறை: பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
X

வனத்துறையை கண்டித்து பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்.

மானாம்பள்ளி வனத்துறையினர் பழங்குடிகள் அமைத்திருந்த குடிசைகளை அகற்றினர்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காடர் பழங்குடிகளுக்கு அரசு ஒன்றரை சென்ட் பட்டா வழங்கியது. இதன்படி தெப்பக்குள மேடு பகுதியில் புதிய கிராமத்தை உருவாக்கும் பணியில் பழங்குடிகள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று மானாம்பள்ளி வனத்துறையினர் பழங்குடிகள் அமைத்திருந்த குடிசைகளை அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடிகள் வனத்துறையினர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் காடர் பழங்குடிகளின் குடிசைகளை அத்துமீறி அகற்றிய வனத்துறைqயினர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி, பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், இடது சாரி கட்சிகள், விசிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, "வன உரிமை சட்டம் 2006 பழங்குடிகள் வனத்திற்குள் வசிக்கும் உரிமையை வழங்கியுள்ளது. அமைச்சர் பட்டா வழங்கிய இடத்திற்கு பதிலாக வேறொரு இடத்தில் குடிசை அமைத்து இருந்தாலும், அதனை பிரித்தெறிய வனத்துறையினருக்கு அதிகாரம் கொடுத்தது யார்?. சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமிப்பு செய்துள்ள ரிசார்டுகள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர்? எளிய மக்கள் மீது வனத்துறையினர் அதிகாரம் செலுத்தும் அநாகரீகமான நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. பட்டா வழங்கிய இடத்தை வருவாய் துறையினர் உடன் இணைந்து பிரித்து தருவது வனத்துறையினர் வேலை. இதற்கு அரசு துறைகள் முறையான தீர்வு காண வேண்டும்" எனத் தெரிவித்தார்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!