திமுகவினர் வாக்காளர்களுக்கு ஹாட் பாக்ஸ் விநியோகம் செய்வதாக புகார்

திமுகவினர் வாக்காளர்களுக்கு ஹாட் பாக்ஸ் விநியோகம் செய்வதாக புகார்
X

ஹாட் பாக்ஸ்களை பிடித்த அதிமுகவினர்.

பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் அதிமுகவினர் ஹாட் பாக்ஸ் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யும் போது கையும் களவுமாக பிடித்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட இரண்டாவது வார்டு திமுக வேட்பாளர் உமா மகேஸ்வரி. இவரது கணவர் சிவசாமி தனது மனைவிக்கு ஆதரவு கேட்டு வாக்கு சேகரிக்கும் போது, பொதுமக்களுக்கு ஹாட் பாக்ஸ் வினியோகம் செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தகவலறிந்த பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் அதிமுகவினர் ஹாட் பாக்ஸ் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யும் போது கையும் களவுமாக பிடித்தனர். இதுகுறித்து பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறும் போது, திமுக வேட்பாளர் கணவர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டுமென தெரிவித்தார் இதுபோல பொள்ளாச்சியில் பல பகுதிகளில் திமுகவினர் பொதுமக்களுக்கு ஹாட் பாக்ஸ் விநியோகம் செய்வது தெரிய வந்துள்ளது எனவும், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் காவல் துறையினரிடம் கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story
ai in future agriculture