போட்டியின்றி பெரும்பான்மை பலத்துடன் பெரியநெகமம் பேரூராட்சியை கைப்பற்றிய திமுக

போட்டியின்றி  பெரும்பான்மை பலத்துடன் பெரியநெகமம் பேரூராட்சியை கைப்பற்றிய திமுக
X

பெரிய நெகமம் பேரூராட்சி.

8 திமுக வேட்பாளர்களும், ஒரு சுயேட்சை வேட்பாளரும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே கோவை மாவட்டம் பெரிய நெகமம் பேரூராட்சியை திமுக பெரும்பான்மை பலத்துடன் போட்டியின்றி கைப்பற்றியுள்ளது. பெரிய நெகமம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. அதில் 8 திமுக வேட்பாளர்களும், ஒரு சுயேட்சை வேட்பாளரும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். கோவை மாவட்டத்தில் பெரிய நெகமத்தை தவிர வேறு எந்த பகுதியிலும் போட்டியின்றி யாரும் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக சார்பில் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்த மூன்றாவது வார்டில் பிரியா, 6 வது வார்டில் பரமேஸ்வரி, 7 வது வார்டில் தேவிகா, 8 வது வார்டில் நந்தவேல் முருகன், 11 வது வார்டில் கஸ்தூரி, 12 வது வார்டில் கலைமணி, 14 வது வார்டில் நாகராஜ், 12 வது வார்டில் சபரீஸ்வரன் ஆகியோர் போட்டியின்றி தேர்வாகினர். இதேபோல 9 வது வார்டில் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்த சுயேச்சை வேட்பாளர் ரவி போட்டியின்றி தேர்வானர். இந்த 9 வார்டுகளில் மட்டும் 12 பேர் வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுள்ளனர். 2 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மற்ற 6 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 14 பேர் போட்டியிடுகின்றனர். திமுகவினர் இந்த வெற்றியை பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!