வக்கீல் கொலையை கண்டித்து கோர்ட் புறக்கணிப்பு

வக்கீல் கொலையை கண்டித்து கோர்ட் புறக்கணிப்பு
X

வக்கீல்கள், நேற்று கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

கும்பகோணத்தில் வக்கீல் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, பொள்ளாச்சியில் வக்கீல்கள் நேற்று ஒரு நாள் பணிக்கு செல்லாமல் புறக்கணித்தனர்.

அரியலுார் மாவட்டம் தா.பமூர் அனைகுடம் என்ற இடத்தில், கும்பகோணம் வக்கீல் சாமிநாதன், வெட்டி கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், கொலையாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், வக்கீல்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதை போலீசார் தடுத்திட வேண்டும்.வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஒரு நாள் வக்கீல்கள், கோர்ட் பணிகளில் ஈடுபடாமல் புறக்கணித்தனர். அதன்படி, பொள்ளாச்சியில் உள்ள ஐந்து கோர்ட்டுகளிலும், வக்கீல்கள் நேற்று பணிக்கு செல்லாமல் புறக்கணித்தனர்.

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!