பொள்ளாச்சியில் கொரோனா நோய் தடுப்பு ஆலோசனை கூட்டம் - அமைச்சர்கள் பங்கேற்பு

பொள்ளாச்சியில் கொரோனா நோய் தடுப்பு ஆலோசனை கூட்டம் - அமைச்சர்கள் பங்கேற்பு
X

பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்பு ஆலோசனை கூட்டம் அமைச்சர்கள் சக்கரபாணி, ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது

பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்பு ஆலோசனை கூட்டம் அமைச்சர்கள் சக்கரபாணி, ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது

கொரோனா தொற்று பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி, பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் கொரேனா நோய் தடுப்பு உணவு துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சுகாதாரத் துறை மூலமாக வீடு வீடாக சென்று நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பரிசோதனைகளை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் வருவாய்துறையினர், சுகாதாரத் துறையினர்,காவல்துறையினர், நகராட்சி அதிகாரிகள், வனத்துறையினர் பங்கேற்றனர்.

முன்னதாக பொள்ளாச்சி ரோட்டரி கிளப் மற்றும் ராயல் ரோட்டரி இணைத்து ரூ 5 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனை, வால்பாறை அரசு மருத்துவனைக்கு தேவையான 100 படுக்கைகள் வழங்கினர். இதனை தொடர்ந்து நல்விடியல் சமூக அறக்கட்டளை சார்பில் தொற்றில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சலுகை கட்டணத்தில் பொள்ளாச்சி மற்றும் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆம்புலன்ஸ் சேவையை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் துவக்கி வைத்தனர்.

Tags

Next Story