கோவையில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் - போலீசார் நடவடிக்கை

கோவையில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் - போலீசார் நடவடிக்கை
X

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்

கோவை மாவட்டத்திற்கு வாகனத்தில் கடத்தி வந்த மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள ரெட்டியார் மடம் காவல்துறை சோதனை சாவடியில் காவலர்கள் இரவு நேர வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த ஆம்னி வேன் ஒன்றினை நிறுத்தி சோதனை செய்தனர். அங்கலக்குறிச்சியை சேர்ந்த வசந்த் என்பவர் ஆம்னி வேனில் பதுக்கி வைத்திருந்த 63 மதுபாட்டில்களை ஆழியார் உதவி ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் போலீசார் மதுபாட்டில்கள் மற்றும் ஆம்னி வேன் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் கோவை மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்படாத நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆழியார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!