துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மீது வழக்குப்பதிவு

துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மீது வழக்குப்பதிவு
X
பொள்ளாச்சி ஜெயராமன் அவரது மகன் பிரவீன் உட்பட 8 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள ஓக்கிலிபாளையம் ஊராட்சியில் திமுக வேட்பாளரை ஆதரித்து பெண் விடுதலை கட்சியைச் சேர்ந்த சபரிமாலா தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது பெண்கள் பாதுகாப்பு குறித்தும், பொள்ளாச்சி பாலியல் பிரச்சினை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அப்போது வந்த அதிமுகவினருக்கும், திமுகவினருக்கும் மோதல் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடக்கிபாளையம் காவல் நிலைய போலீசார் இரு தரப்பினரிடையே பேசி சமாதானப்படுத்தி கூட்டதை கலைத்தனர்.

பொள்ளாச்சி ஜெயராமன் தூண்டுதலின் பேரில் தகாத வார்த்தைகளில் பேசி காரை ஏற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாக திமுக ஒக்கிலிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்தசாரதி வடக்கிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் காவல் துறையினர் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அவரது மகன் பிரவீன் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
the future of ai in healthcare