மாசாணியம்மன் கோவிலில் நடிகர் விஜய் பெற்றோர் சுவாமி தரிசனம்

மாசாணியம்மன் கோவிலில் நடிகர் விஜய் பெற்றோர் சுவாமி தரிசனம்
X

பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், நடிகர் விஜய்யின் பெற்றோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

Masani Amman Kovil - கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், நடிகர் விஜய்யின் பெற்றோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

Masani Amman Kovil -திரைப்பட இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர், அவரது மனைவி ஷோபா ஆகியோர், தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு அவ்வப்போது செல்வது வழக்கமாக உள்ளது. நடிகர் விஜய்யின் பெற்றோர் என்பதால், இவர்களை காண மக்களும் ஆர்வம் காட்டுகின்றனர். நேற்று பொள்ளாச்சி ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோவிலுக்கு, நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா ஆகியோர், நேற்று வந்தனர். கோவிலில் அம்மனை தரிசித்து பிரசாதம் பெற்றனர்.

இதையறிந்து, கோவிலில் திரண்ட மக்கள், இவர்களுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!