பொள்ளாச்சியில் 1,308 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்: 3 பேர் கைது
அனுமதியின்றி ஜெலட்டின் குச்சிகளை வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட மூவர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளில் ஏராளமான தனியாருக்கு சொந்தமான கல்குவாரிகள் அதிக அளவில் உள்ளன. இங்கு பாறைகளை வெடி வைப்பதற்கென ஜெலட்டின் குச்சிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
குவாரிகளில் முறையாக அனுமதி பெற்று செயல்படுகிறதா என்பதை கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில் துணை கண்காணிப்பாளர் செல்வி தமிழ் மணி தலைமையில் போலீசார் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட கல் குவாரிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து கோமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது அடிப்படையில், நாட்டுக்கல் பாளையம் பகுதியில் விஜயபாபு என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் மோட்டார் செட் பகுதியில் உரிய அனுமதி இல்லாமல் வைத்திருந்த 1308 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் வெடிக்க பயன்படுத்தும் 100 மீட்டர் ஒயர் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் உரிய அனுமதி பெறாமல் வைத்திருந்த குற்றத்துக்காக கஞ்சம்பட்டியைச் சேர்ந்த பொன்னுச்சாமி, கனகராஜ், விஜய பாபுஆகிய மூவரை கோமங்கலம் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu