பிரதமா் பங்கேற்கும் நிகழ்ச்சி: கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்

பிரதமா் பங்கேற்கும் நிகழ்ச்சி: கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்
X

கோப்புப்படம் 

பல்லடத்தில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியையொட்டி கோவையில் கனரக வாகனங்களுக்கான போக்குவரத்தில் செவ்வாய்க்கிழமை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பல்லடத்தில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியையொட்டி கோவையில் கனரக வாகனங்களுக்கான போக்குவரத்தில் செவ்வாய்க்கிழமை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாராயணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

பிரதமா் நரேந்திர மோடி கோவை, சூலூா் மற்றும் பல்லடம் பகுதிகளுக்கு வருவதையொட்டி செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கனரக வாகனங்களுக்கு மட்டும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, பாலக்காட்டிலிருந்து வாளையாறு வழியாக தாராபுரம், திருச்சி செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் மதுக்கரை, கற்பகம் கல்லூரி சந்திப்பு, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, தாராபுரம் வழியே செல்ல வேண்டும்.

கோவை மாநகருக்குள் இருந்து வரும் கனரக வாகனங்கள் சுங்கம் வழியாக பொள்ளாச்சி சாலை, ஈச்சனாரி, கற்பகம் கல்லூரி சந்திப்பு, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, தாராபுரம் வழியே செல்ல வேண்டும்.

கோவை மாநகா் சிங்காநல்லூரில் இருந்து திருச்சி சாலையில் வரும் கனரக வாகனங்கள் சிந்தாமணிபுதூா், நான்கு ரோடு சந்திப்பு, பட்டணம் பிரிவு, கற்பகம் கல்லூரி சந்திப்பு, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, தாராபுரம் வழியே செல்ல வேண்டும், அல்லது சிந்தாமணிபுதூா், நான்கு ரோடு சந்திப்பு, நீலாம்பூா், அவிநாசி சாலை, கருமத்தம்பட்டி, அவிநாசி வழியே செல்ல வேண்டும்.

பொள்ளாச்சியில் இருந்து பல்லடம் செல்லும் கனரக வாகனங்கள் உடுமலைப்பேட்டை, தாராபுரம் வழியே செல்ல வேண்டும். கருமத்தம்பட்டியில் இருந்து வரும் கனரக வாகனங்கள் சூலூா் வழியில் செல்வதற்கு அனுமதி இல்லை. அதற்கு பதிலாக நீலாம்பூா், சிந்தாமணிபுதூா் சந்திப்பு, கற்பகம் கல்லூரி சந்திப்பு, பொள்ளாச்சி வழியே செல்ல அனுமதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார் .

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்