கோவை வெள்ளக்கிணர் அம்மன் கோவிலில் நவராத்திரி கொலு
வெள்ளக்கிணர் அம்மன் கோவில் நவராத்திரி திருவிழா
கோவை வெள்ளக்கிணரில் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயில் அமைந்து உள்ளது. இங்கு தற்போது நவராத்திரி கொலு விழா நடைபெற்று வருகிறது.
இதன் ஒருபகுதியாக கடந்த 15ம் தேதி தொடங்கிய விழாவில் சிறப்பு பூஜை, அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து பண்ணாரி அம்மன் கோயிலில் இருந்து பக்தர்கள் கரகம் எடுத்து வந்தனர்.
நேற்று மாலை தச்சந்தோட்டம் பகுதியில் இருந்து சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக அம்மனை சப்பரத்தில் ஏற்றும் முன்பாக பக்தர்களின் கத்தி போடும் நிகழ்வு நடை பெற்றது.
தொடர்ந்து ஆலங்கொம்பு அழகு வீரக்குமாரர்களின் கத்தி போடும் பரவச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
பின்னர் கோவிலில் தீர்த்தபிரசாதம், தீபாரா தனை, அன்னதானம் நடைபெற்றது. இன்று களர் தோட்டத்தில் இருந்து சாமுண்டி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் வெள்ளை தாமரை வீரகுமாரர்களின் கத்தி போடும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. நவராத்திரி கொலுவுக்கான ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu