ஈரோடு தேர்தல் வெற்றி திமுக ஆட்சியின் மணிமகுடம்.. அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி
தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி. (கோப்பு படம்).
கோவையில் மார்ச் 5 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுகிறது. அந்த நிகழ்ச்சிகளில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
இதுகுறித்து தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோவையில் செங்கல் உற்பத்தியை பொருத்தவரை எந்தெந்த இடங்களில் நீதிமன்றம் சுட்டிக் காட்டுகிறதோ அந்த இடங்களைத் தவிர மற்ற இடங்களில் செங்கல் உற்பத்தி பணிகள் தொடங்கும். மாவட்ட நிர்வாகம் நல்ல தீர்வை கொடுக்கும்.
வருவாய்த் துறையில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் 24 மணி நேரத்திற்குள் மின் இணைப்பு வழங்கப்படும். கோடை கால மின் தேவைகளை பூர்த்தி செய்ய ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு உள்ளதால் மின் விநியோகத்தில் பாதிப்பு வராது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கடைசி நேர பிரச்சாரம் வரை வெற்றி பெறுவோம் என்றும் வாக்கு செலுத்தி விட்டு வந்து வெற்றி பெறுவோம் என்று கூறியவர்கள் இன்று தோல்விக்கு பல்வேறு காரணங்களை சொல்கிறார்கள். அவர்கள் நினைத்த வாக்கு கிடைக்காததால் விரக்தியில் பேசுகின்றனர்.
அதிமுக ஆளும் கட்சியாக இருந்தபோது என்ன நடந்தது? என கேள்வி எழுப்பினார். இந்த இடைத்தேர்தல் ஆட்சிக்கு மணிமகுடமாக உள்ளது. இந்த வெற்றிப் பயணம் நாடாளுமன்ற தேர்தலின் தொடக்கம். அது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
அதிமுகவிற்கான வாக்கு வங்கி அவ்வளவுதான். பிரச்சாரத்தில் சிலிண்டர் விலை தொடர்பாக கருத்துக்களை முன் வைத்தார்களா?. அவர்களுக்கு மக்களின் நன்மை மீது கவலை இல்லை. குறை கூறியதுடன் அவர்களுக்கு தேவை டெல்லியில் போட்டி போட்டு யார் அடிமையாக இருப்பது என்பது மட்டுமே என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu