காட்டு யானை தாக்கி வாட்சர் பலி

காட்டு யானை தாக்கி வாட்சர் பலி
X

கோவை, சிறுவானி அருகே காட்டு யானை தாக்கியதால், வாட்சர் உயிரிழந்தார்.

கோவை சிறுவானி மலையடிவார பகுதியில், காட்டு யானை தாக்கியதால், வாட்சர் உயிரிழந்தார்.

கோவை மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுவானி மலையடிவாரம் சாடிவயல், சிங்கம்பதி கிராமங்கள் உள்ளது. அதன் சுற்று வட்டார கிராமங்களில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். இந்த வனப்பகுதிகளில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக காணப்படுகின்றன. அவ்வப்போது காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்துகின்றன. இதனால் சில நேரங்களில் மனித - வனவிலங்கு மோதல் ஏற்படுகிறது.

சிங்கம்பதி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர் தமிழக சுற்றுலா துறையில் வாட்சர் பணி செய்தார். இன்று காலை, தனது வீட்டில் பின்புறம் உள்ள கழிவறைக்கு சென்றார். அப்போது அங்கு நின்றிருந்த காட்டு யானை திடீரென, முருகனை தாக்கியது.

இதில் அவர் படுகாயமடைந்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த மக்கள், காட்டு யானையை கூச்சலிட்டு விரட்டினர். படுகாயமடைந்த முருகன், கோவை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி முருகன் உயிரிழந்தார்.

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!