கோவை அருகே காட்டுப்பன்றி வேட்டையாடிய 6 பேர் கைது- ரூ.60 ஆயிரம் அபராதம் விதிப்பு!

கோவை அருகே காட்டுப்பன்றி வேட்டையாடிய 6 பேர் கைது- ரூ.60 ஆயிரம் அபராதம் விதிப்பு!
X

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே, காட்டுப்பன்றியை வேட்டையாடிதாக கைது செய்யப்பட்ட 6 பேர்.

கோவை அருகே, காட்டுப்பன்றியை வேட்டையாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்; அவர்களுக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதி, கோபனாரி. இப்பகுதியில் வனத்துறை மற்றும் காவல்துறையின் எச்.டி.எப். பிரிவினர் இணைந்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் கூட்டு ரோந்துப்பணி மேற்கொண்டனர்.

அப்போது, குண்டுக்கல் சராக வனப்பகுதியின் ஓடைக்குள் இரண்டு நபர்கள் இருப்பது தெரிய வந்தது. அவர்களை சுற்றி வளைத்து இருவரையும் பிடித்தனர். இருவரும் கேரளா மாநிலம், கோட்டத்துறையைச் சேர்ந்த ரங்கசாமி மற்றும் மணிகண்டன் என்பதும், இருவரும் காட்டுப்பன்றி கறியை ஓடையில் சுத்தப்படுத்திக் கொண்டிருந்ததும் தெரியவந்தது.

மேலும் ஓடையின் மேட்டுப்பகுதியில், கறியை வெட்டிக் கொண்டிருந்த அவர்களது கூட்டாளிகள் நான்கு நபர்கள், கறி மற்றும் வெட்டுக்கத்தியை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். காட்டுப்பன்றி இறைச்சி சுமார் 30 கிலோ கைப்பற்றப்பட்டது தப்பியோடிய நபர்களை வனத்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். அவர்களில் செந்தில்குமார், செல்வம், சக்திவேல் மற்றும் வேலுச்சாமி ஆகிய நான்கு பேரும் கேரளா பகுதியில் தனித்தனியே பிடிபட்டனர்.

பிடிபட்டவர்களிடம் தீவிர விசாரணை செய்ததில், இவர்கள் ஆறு பேரும், கேரளா மாநில எல்லையோரம் குடியிருப்பவர்கள் என்பதும், அருகிலுள்ள தமிழ்நாடு வனப்பகுதிக்குள் நுழைந்து, இரும்பு கம்பிகளில் சுருக்கு வைத்து, காட்டு பன்றியை வேட்டையாடி, வெட்டி கூறு போட்டதும், தங்களது தேவைக்கு போக மீதியை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. 6 பேர் மீதும் வன உயிரின குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம், 60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்