பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவி தற்கொலை முயற்சி

பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவி தற்கொலை முயற்சி
X

சரவணக்குமார்.

அனைத்து மகளிர் காவல் துறையினர் சரவணக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது கைது செய்தனர்.

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இதனிடையே அந்த மாணவிக்கும், அன்னூர் பகுதியை சேர்ந்த விமான நிலையத்தில் துப்புரவு பணி மேற்பார்வையாளராக பணியாற்றும் சரவணக்குமார் (22) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த மாணவியை மிரட்டி சரவணக்குமார் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து சரவணக்குமார் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததாகவும், இது குறித்து வெளியே சொல்ல முடியாமல் கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பள்ளிக்கு சென்ற அந்த மாணவி மன உளைச்சல் தங்க முடியாமல் விரக்தியில் பள்ளி கழிப்பறையில் கையை பிளேடால் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து மாணவி சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல் துறையினர் விசாரணையில் பாலியல் தொல்லை காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு விரக்தியில் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதையடுத்து துடியலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் சரவணக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!