ஆதார் கார்டில் பெயரை மாற்ற அலைக்கழிப்பதாக பொதுமக்கள் புகார்

ஆதார் கார்டில் பெயரை மாற்ற  அலைக்கழிப்பதாக பொதுமக்கள் புகார்
X

ஆதார் கார்டு திருத்தம் செய்ய, அன்னூர் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் பொதுமக்கள்.

ஆதாரில் பெயர் திருத்தம் செய்ய, அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாக, புகார் எழுந்துள்ளது.

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், ஆதார் கார்டில் பெயரில் பிழைகளை திருத்த, முகவரி மாற்றம் செய்ய, அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். அங்கு தினமும் காலை 100 க்கும் மேற்பட்டோர், இதற்காக வருகின்றனர்.

ஆனால், அங்கு 50 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படுவதாகவும், மீதம் இருப்பவர்களை அடுத்த நாள் வாருங்கள் என்று சொல்லி, திரும்பி அனுப்பி விடுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஆதார் கார்டு பதிவு செய்யும் பணியில் உள்ள நபர்கள், தங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு டோக்கன்கள் இல்லாமல், ஆதார் கார்டில் பிழை திருத்தி தருவதாகவும், தினசரி அங்கு வரும் பொதுமக்களை அலைக்கழிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

எனவே, அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் கார்டு தொடர்பான பணிகளை வேகப்படுத்த, கோவை மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; மேலும் இ-சேவை மையங்கள் மற்றும் இதர இடங்களில் இதற்க்முகாம்கள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!