மேட்டுப்பாளையம் குரும்பனூர் பகுதியை கலக்கி வரும் பாகுபலி காட்டு யானை

மேட்டுப்பாளையம் குரும்பனூர் பகுதியை கலக்கி வரும் பாகுபலி காட்டு யானை
X

ஊருக்குள் புகுந்த காட்டு யானை பாகுபலி.

மேட்டுப்பாளையம் குரும்பனூர் பகுதியை கலக்கி வரும் பாகுபலி யானையை வனப்பகுதியில் விடவேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நெல்லிமலை உள்ளது. இப்பகுதியை சுற்றி குரும்பனூர், பஞ்சுக்காடு, சமயபுரம், பத்திரகாளியம்மன் கோயில் பகுதி, தேக்கம்பட்டி, கிட்டாம்பாளையம், மங்களக்கரைபுதூர், தாசம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளது. இந்நிலையில் மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதியில் நடமாடி வந்த பாகுபலி என பொதுமக்களால் அழைக்கப்படும் ஒற்றை காட்டு யானை கடந்த 3 நாட்களாக மேற்கண்ட பகுதியில் முகாமிட்டு விவசாய பயிர்களை நாசப்படுத்தி வருகிறது.

தொடர்ந்து அப்பகுதியிலேயே முகாமிட்டுள்ள பாகுபலி யானை தினசரி மாலை 7 மணிக்கு மேல் நெல்லிமலை பகுதியில் இருந்து குரும்பனூர் வழியாக வெளியே வந்து விளை நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தி செல்கிறது.

இந்நிலையில் நேற்றிரவு வனத்தை விட்டு வெளியேறிய காட்டுயானை பாகுபலி வனத்துறையினரையும் மீறி மங்களக்கரைபுதூர் பகுதியில் உள்ள வாழை தோட்டத்திற்குள் நுழைந்தது. இதில் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த கதளி, செவ்வாழை தோட்டங்களில் இருந்த 300க்கும் மேற்பட்ட வாழைகளை சேதப்படுத்தியது. இதனால் விசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. எனவே,விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டுயானையை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்ந்து நெல்லிமலை வனப்பகுதியிலேயே முகாமிட்டுள்ள பாகுபலி யானை இதுவரை மனிதர்கள் எவரையும் தாக்கியதில்லை என்றாலும் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன் அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்