கோவை வனப்பகுதியில் உடும்பு வேட்டையாடிய இருவர் கைது

கோவை வனப்பகுதியில் உடும்பு வேட்டையாடிய இருவர் கைது
X

உடும்பு வேட்டையாடிய இருவர்

கோவை வனப்பகுதியில், உடும்பு வேட்டையாடிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கன்னிமார் கோவில் சராகப் பகுதியில், வனத்துறையினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு நபர்கள், உடும்பை வேட்டையாடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரும் தப்பியோடி தலைமறைவாகிவிட்டனர். வேட்டையாடிய மூன்று உடும்புகள் மற்றும் வலைகள் கைப்பற்றப்பட்டன.

தப்பியோடிய இருவரையும் கண்டுபிடிக்க, தனிக் குழுக்கள் அமைத்து, தொடர் தேடுதல் வேட்டையில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இதில் பிளிச்சி கவுண்டனூர் பகுதியை சேர்ந்த இராஜேந்திரன் (41), மணி (42) ஆகியோரை பிடித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். வேட்டையாடியதை இருவரும் ஒப்புக் கொண்டதோடு, வனப்பகுதியில் வேட்டையாடிய இடம் மற்றும் வெட்டுக் கத்தியை மறைத்து வைத்த இடம் ஆகியவற்றை அடையாளம் காட்டினர். பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!