காலில் விழுந்து கதறிய அரசு ஊழியர்; திடுக்கிடும் தகவல்களால் பரபரப்பு

காலில் விழுந்து கதறிய அரசு ஊழியர்; திடுக்கிடும் தகவல்களால் பரபரப்பு
X

காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட முத்துசாமி.

கோவை அருகே அரசு ஊழியர் ஒருவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை அன்னூர் அடுத்த ஒட்டர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால்சாமி. இவர் கிராம நிர்வாக அலுவலகத்தில் வி.ஏ.ஓ., கலைச்செல்வியிடம் தனது சொத்து விவரங்களை சரிபார்க்க அணுகியுள்ளார்.

அப்போது விஏஓ., கலைச்செல்விக்கும் கோபால்சாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனை வி.ஏ.ஒ., உதவியாளரான முத்துசாமி தடுக்க முயன்றுள்ளார். உடனே ஆத்திரமடைந்த கோபால்சாமி, முத்துசாமியின் சாதிப் பெயரை சொல்லியும், ஊரில் இருக்க முடியாது என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்த மிரட்டலுக்கு பயந்த முத்துசாமி, கோபால் சாமியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பது போன்றும், காலில் விழுந்த முத்துசாமியை மன்னித்துவிட்டேன் என கோபால்சாமி கூறிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், அன்னூர் காவல் நிலையத்தில் வி.ஏ.ஒ., உதவி உதவியாளர் முத்துசாமி தன்னை தாக்கியதாக கோபால்சாமி புகார் அளித்துள்ளார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முத்துசாமியை கோபால்சாமி சாதியை சொல்லி திட்டியதுடன் மன்னிப்பு கேட்குமாறு மிரட்டியதாக கூறப்படும் நிலையில் சாதிய வன்கொடுமை தொடர்பான புகார் எதுவும் இது வரை பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவத்தை கண்டித்து கோபால்சாமி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தபெதிக, திவிக உள்ளிட்ட அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பு நிலவி வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் தலைமையில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். மேலும் காவல்துறையில் வழக்கு பதிவு செய்து தெளிவான அறிக்கை சமர்பிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!