விபத்தில் சிக்கியவர்களை தூக்கிச் சென்று காப்பாற்றிய பெண் காவல் ஆய்வாளர்

விபத்தில் சிக்கியவர்களை தூக்கிச் சென்று காப்பாற்றிய பெண் காவல் ஆய்வாளர்
X

ஆய்வாளர் நித்யா

திடீரென இருசக்கர வாகனத்தின் குறுக்கே நாய் வந்ததால் அதன் மீது மோதிய வேகத்தில் தம்பதியினர் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் இன்று காலை அன்னூர் சென்று விட்டு மேட்டுப்பாளையம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பொகலூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென இருசக்கர வாகனத்தின் குறுக்கே நாய் வந்ததால் அதன் மீது மோதிய வேகத்தில் தம்பதியினர் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்நிலையில் அந்த இருசக்கர வாகனத்தின் பின்னால் சென்று கொண்டிருந்த அன்னூர் காவல் ஆய்வாளர் நித்தியா சம்பவத்தை நேரில் பார்த்ததும், தனது வாகனத்தை உடனடியாக நிறுத்தி இருவரையும் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தார்.

பின்னர் ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்து வர வைத்த அவர் இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் அன்னூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். தம்பதியினர் அன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பினர். இந்த காட்சிகள் அருகில் இருந்த பெட்ரோல் பங்க் கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு காவல் ஆய்வாளர் நித்தியாவிற்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!