கோவையில் ஏலச்சீட்டு நடத்தி ஒரு கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக புகார்
X
ஏலச்சீட்டு மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.
By - V.Prasanth Reporter |18 July 2022 4:25 PM IST
கோவையில் ஏலச்சீட்டு நடத்தி ஒரு கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
கோவை காரமடை கணபதி நகரை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி தெய்வ சிகாமணி. இவர்களின் மகள் மனோன்மணி. மூவரும் சேர்ந்து டி.வி.எம். சேமிப்பு திட்டம் என்ற பெயரில் 20 வருடங்களாக ஏலச்சீட்டு நடத்தி வருவதாகவும் இவர்களிடம் 130 க்கும் மேற்பட்டோர் ரூ. 70 லட்சம் முதல் 1 கோடி வரை செலுத்தி வந்த நிலையில் கடந்த 5 மாதங்களாக ஏலச்சீட்டு நிறைவடைந்தும் அதற்கான தொகையை திருப்பி தராமலும் அவதூறாக பேசுவதாகவும், மனோன்மணி தலைமறைவாக உள்ளதாகவும்உடனடியாக பணத்தை மீட்டுதருமாறு பாதிக்கப்பட்டவர்கள் 35 க்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu