மேட்டுப்பாளையத்தில் நாளை உங்களைத் தேடி, உங்கள் ஊரில் முகாம் - ஆட்சியர் அறிவிப்பு

மேட்டுப்பாளையத்தில் நாளை உங்களைத் தேடி, உங்கள் ஊரில் முகாம் - ஆட்சியர் அறிவிப்பு
X

Coimbatore News- மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி

Coimbatore News- மேட்டுப்பாளையம் வட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அனைத்து பகுதிகளிலும் கள ஆய்வில் ஈடுபட உள்ளனர்.

Coimbatore News, Coimbatore News Today- தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த மக்களை நாடி மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் என்ற அடிப்படையில் ’உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தின் படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட வேண்டும்.

அப்போது அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்யும் வகை செய்ய வேண்டும். இதற்காக ’உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ என்ற திட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்களால் வட்ட அளவில் நடத்தப்பட வேண்டும்.

இந்த திட்டம் கோவை மாவட்டத்தில் நாளை மேட்டுப்பாளையத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி துவக்கி வைக்க உள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் படி 01.02.2024 அன்று காலை 9 மணி முதல் 02.02.2024 காலை 9 மணி வரை மேட்டுப்பாளையம் வட்டத்திலேயே கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி மற்றும் மாவட்ட முதல் நிலை அலுவலர்கள் தங்கியிருந்து அனைத்து பகுதிகளிலும் கள ஆய்வில் ஈடுபட உள்ளனர்.

அப்போது அரசு அலுவலகங்களை ஆய்வு செய்தும், ஆய்வின் போது சந்திக்கும் மக்களின் குறைகளை கேட்டறிந்தும், அரசின் நலத்திட்டங்களும் சேவைகளும் தங்குதடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதில் பொதுமக்கள் தங்கள் குறைகளுக்கான மனுக்களை உரிய அலுவலர்களிடம் நேரில் அளித்து அல்லது பிற்பகல் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாலை 4 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நேரில் அளித்து பயன் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது