அரசுப் பேருந்து மீது லாரி மோதி விபத்து: 8 பேர் காயம்
பேருந்து லாரி விபத்து.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து சத்தியமங்கலத்திற்கு அரசு பேருந்து இன்று காலை 30 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. சிறுமுகை அருகே ஆலாங்கொம்பு என்ற இடத்தில் சென்று கொண்டிருக்கும் போது, காரமடை சாலையில் தூத்துக்குடியில் இருந்து கரி கட்டைகளை ஏற்றி வந்த சரக்கு லாரி எதிரே வந்த அரசு பேருந்து மீது வேகமாக மோதியது. இதில் அரசு பேருந்து நிலை தடுமாறி சாலையோரம் பக்கவாட்டில் சாய்ந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த பயங்கர விபத்தில் பேருந்தின் ஓட்டுனர் நடத்துனர் உள்பட எட்டு பேர் காயங்களுடன் உயிர் தப்பினர்.
லாரி மோதிய வேகத்தில் அரசு பேருந்து மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சாலையோரம் இருந்த கடைகள் மீது சாய்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த எட்டு பேர் மட்டும் காயங்களுடன் உயிர் தப்பினர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கபட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இவ்விபத்து காரணமாக மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அரசு பேருந்து மீது சரக்கு லாரி மோதும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது அந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu