தவறியது ரூ.1.5 லட்சம் மொபைல்போன் பார்சல்; ஒப்படைத்த பூசாரிக்கு பாராட்டு

தவறியது ரூ.1.5  லட்சம் மொபைல்போன் பார்சல்; ஒப்படைத்த பூசாரிக்கு பாராட்டு
X

தவறவிட்ட பார்சலை, உரியவரிடம் ஒப்படைத்த பூசாரி விஸ்வநாதன்.

பஸ்சில் இருந்து தவறி விழுந்த, ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள மொபைல் பார்சலை உரியவரிடம் ஒப்படைத்த பூசாரி கவுரவிக்கப்பட்டார்.

அன்னுாரை அடுத்துள்ள ஓரைக்கால்பாளையத்தை சேர்ந்தவர் பிரசாத், 34. இவர் கணேசபுரத்தில் மொபைல் கடை வைத்துள்ளார். நேற்று மாலை கோவையில் இருந்து இவருக்கு, தனியார் பஸ்சில் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன்கள் அடங்கிய பெட்டி பார்சலாக அனுப்பி வைக்கப்பட்டது. கணேசபுரத்தில் பார்த்தபோது பார்சலை காணவில்லை.

அதிர்ச்சியடைந்த பிரசாத் மற்றும் ஊழியர்கள், கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலையில் தேடினர். அப்போது குன்னத்துாரில் உள்ள மாகாளி அம்மன் கோவில் பூசாரி விஸ்வநாதன், ரோட்டோரத்தில் கிடந்த பார்சலை எடுத்து பார்சலில் உள்ள மொபைல் எண்ணை பார்த்து தகவல் தெரிவித்தார். ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அந்த மொபைல் போன்களை உரியவரிடம் ஒப்படைத்தார். பார்சலை தவறவிட்ட பிரசாத் நன்றி தெரிவித்தார். அப்பகுதி மக்களும், பூசாரியின் நேர்மைக்கு பாராட்டு தெரிவித்தனர்.

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!