யானையை தாக்கிய பாகன்கள் பணியிடை நீக்கம்

யானையை தாக்கிய பாகன்கள் பணியிடை நீக்கம்
X
மேட்டுப்பாளையம் யானைகள் நலவாழ்வு முகாமில் யானையை தாக்கிய பாகன்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் தேக்கம் பட்டியில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 26 கோவில் யானைகள் பங்கேற்றுள்ளன. இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் யானை ஜெய்மால்யதாவை அதன் பாகன்கள் இருவர் கடுமையாக தாக்கும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து புத்துணர்வு முகாமில் திருவில்லிபுத்தூர் திருக்கோயில் யானை ஜெயமால்யதாவை தாக்கிய பாகன் கோ.வினில்குமாரும், உதவி பாகனும் திருக்கோயில் நிர்வாகத்தால் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து இந்துசமய அறநிலைத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் யானைப்பாகன் வினில் குமாரை விசாரணைக்காக மேட்டுப்பாளையம் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறன்றனர்.

Tags

Next Story
ai future project