மேட்டுப்பாளையத்தில் சிறுத்தையை பிடிக்க கூண்டு - வனத்துறையினர் தீவிர முயற்சி

மேட்டுப்பாளையத்தில் சிறுத்தையை பிடிக்க கூண்டு - வனத்துறையினர் தீவிர முயற்சி
X
கோவை மாவட்டம் வனப்பகுதியை ஒட்டி மோத்தேபாளையம், அறிவொளி நகர் ஆகிய பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால் வனத்துறையினர் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு செலுத்தி சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்தனர்.

கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட சென்னா மலை கரடு என்ற பகுதி உள்ளது. சென்னமலை கரடு வனப்பகுதியை ஒட்டி மோத்தேபாளையம், அறிவொளி நகர் ஆகிய பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. சென்னா மலைகரடு வனப்பகுதியில் இருந்து வரும் சிறுத்தை கிராமங்களில் உள்ள தோட்டங்களில் புகுந்து ஆடு மாடு மற்றும் நாய்களை கொன்று இறையாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக சென்னாமலை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.

இதையடுத்து சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க கிராம மக்கள் சிறுமுகை வனத்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்த நிலையில், வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் சென்னாமலை கரடு வனப்பகுதியை ஒட்டி சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்தனர். மேலும் வனத்துறையினர் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு செலுத்தி வருகின்றனர்.

Tags

Next Story