கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை தொடக்கம்
சுவாமியே சரணம் ஐயப்பா.... சுவாமியே சரணம் ஐயப்பா (கோப்பு படம்)
கோவை சித்தாபுதூர் ஐயப்ப சாமி பொற்கோவிலில் மண்டல பூஜை விழா வருகிற 17ம் தேதி (வெள்ளிக்கிழமை)தொடங்குகிறது. அன்றைய தினம் கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிய வருவது வழக்கம்.
ஐயப்பசாமி மண்டல பூஜை விழாவை முன்னிட்டு டிசம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் 12ம் தேதி செவ்வாய்க்கிழமை வரை ஆலய தந்திரி பிரம்மஸ்ரீ சிவபிரசாத் நம்பூதிரி தலைமையில் புகழ்பெற்ற தாந்திரீக ஆச்சாரியார்கள் முன்னிலையில் லட்சார்ச்சனை நடைபெற உள்ளது.
இதில் பல்வேறு காரிய சித்திக்கான சிறப்பு அர்ச்சனைகள், சனிதோஷ சாந்திஜெபம் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. டிசம்பர் 13ம் தேதி ஐயப்பசாமிக்கு களபாபிஷேகம் நடைபெறும்.
மண்டல பூஜை விழாவை முன்னிட்டு 16ம் தேதி சனிக்கிழமை அகண்டநாம பஜனையும், 17ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானமும் நடைபெற உள்ளது.
27ம் தேதி புதன்கிழமை மகாகணபதி ஹோமம், மண்டல விளக்கு பூஜை நடக்கிறது. அன்றையதினம் மண்டல மகரவிளக்கு காலத்தில் பக்தர்களுக்கு மாலை அணிவிக்கப்படுகிறது.
மேலும் இருமுடி கட்டி சபரிமலை பயணம் செல்ல வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஐயப்ப சேவாசங்கம் செய்து வருகிறது.ஜனவரி 15ம் தேதி திங்கட்கிழமை மகரஜோதியை முன்னிட்டு யானை வாத்தியத்துடன் காட்சி சீவேலியும், மாலையில் மகா தீபாராதனை, முத்தாயம்பகையும் நடைபெறும்.
இந்த தகவலை கோவை ஸ்ரீ ஐயப்பசேவா சங்க செயலாளர் விஜயகுமார் தெரிவித்து உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu