/* */

கோவையில் மார்ச் 9-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

கோவையில் தேசிய மக்கள் நீதிமன்றம் வரும் மார்ச் 9-ஆம் தேதி நடைபெறுகிறது.

HIGHLIGHTS

கோவையில் மார்ச் 9-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்
X

பைல் படம்

கோவையில் தேசிய மக்கள் நீதிமன்றம் வரும் மார்ச் 9-ஆம் தேதி நடைபெறுகிறது. இது தொடா்பாக கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்

தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படி, கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலும், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூா், மதுக்கரை, அன்னூா் ஆகிய நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் வரும் மார்ச் 9-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

அதில், ஏற்கெனவே நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகளில், சமரசம் செய்யக்கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை தொடா்பான வழக்குகள், வங்கிக் கடன், கல்விக் கடன் தொடா்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்பப் பிரச்னைகள் தொடா்பான வழக்குகள், உரிமையியல் வழக்குகள், நிலம், வருமானம் மற்றும் சொத்து வரி பிரச்னைகள் போன்ற வழக்குகள் விசாரிக்கப்படும்.

மக்கள் நீதிமன்றம் முன்பாக முடித்துக் கொள்ளும் வழக்குகளுக்கு மேல் முறையீடு கிடையாது. அத்துடன், மக்கள் நீதிமன்றம் மூலம் முடித்துக் கொள்ளப்படும் வழக்குகளுக்கு செலுத்தப்படும் நீதிமன்றக் கட்டணம் முழுமையாக திருப்பித் தரவும் வாய்ப்பு உள்ளது.

எனவே, பொதுமக்களுக்கு, இத்தகைய வழக்குகள் நிலுவையில் இருக்கும் பட்சத்தில், சட்ட ரீதியாகவும், சமரச முறையிலும் தீா்வு காணப்படும். மேலும், இத்தகைய வழக்குகளுக்கு தீா்வு காண்பதற்காக, கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் வரும் மார்ச் 8-ஆம் தேதி வரை சிறப்பு அமா்வுகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 27 Feb 2024 1:40 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'ரெமல்' புயலாக...
  2. Trending Today News
    ஓடும் லாரியில் துணிச்சல் திருட்டு..! வீடியோ வைரல்..! (செய்திக்குள்...
  3. இந்தியா
    ராஜ்கோட் விளையாட்டு அரங்கத்தில் பயங்கர தீ விபத்து: 4 பேர்
  4. சோழவந்தான்
    உசிலம்பட்டி அருகே பத்ரகாளியம்மன் ஆலய திருவிழா: பக்தர்கள் பரவசம்..!
  5. திருத்தணி
    சோதனை சாவடி எல்லையில் உள்துறை செயலாளர் ஆய்வு
  6. கல்வி
    அறிவுக்கனிகளில் பங்கு கொடுத்த ஆசானை போற்றுவோம்..!
  7. குமாரபாளையம்
    பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு..!
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் ஆபத்தான மரக்கிளைகளை அகற்ற கோரிக்கை
  9. வீடியோ
    🔴LIVE : அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பு ||...
  10. வீடியோ
    நான் பரமாத்மாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் | Modi பேச்சுக்கு...