அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்
அடிப்படை வசதி கோரி கறுப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்
கோவை உக்கடம் 86-வது வார்டு ரேஸ்மா கார்டன் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என கூறி மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தோம்.
உக்கடம் பகுதியில் உள்ள மாநகராட்சி கழிவுநீர் பண்ணையில் இருந்து தண்ணீர் செல்வதற்கான பாதையில் உடைப்பு ஏற்பட்டு, சாலைகளில் அடிக்கடி தண்ணீர் தேங்கி நிற்கிறது.
மழைக்காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால் சுகாதாரமற்ற சூழல் ஏற்படுகிறது. இதனால் உடல் பாதிப்பு ஏற்படுகிறது.
மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்ட பொழுது நேரில் வந்து பார்த்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். ஆனால் தற்போது வரை அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடக்காமல் மந்த கதியில் உள்ளது.
எனவே நிர்வாகம் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், காலதாமதம் செய்வதை கண்டித்தும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu