சாதாரண மக்களும் பயன்பெறவே நடப்போம் நலம் பெறுவோம் திட்டம்: அமைச்சர் முத்துசாமி
நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் முத்துசாமி
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், நடப்போம் நலம் பெறுவோம் என்ற திட்டத்தை சென்னையில் இருந்து தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 8 கிலோ மீட்டர் நடைபயற்சி மேற்கொண்டு காணொளி மூலம் தொட ங்கி வைத்தார்.
அதன் ஒரு பகுதியாக கோவை ரேஸ்கோர்சில் நடந்த நடைபயிற்சியை தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துச்சாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நடைபயிற்சி ரேஸ்கோர்ஸ், திருச்சி சாலை, வாலாங்குளம் வழியாக சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் சென்று மீண்டும் ரேஸ்கோர்ஸ் பகுதியை வந்தடைந்தது.
நடை பயிற்சியை முடிந்த பின்னர் அமைச்சர் முத்து சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், இது ஏதோ ஒரு திட்டம் அல்ல. நடக்க வேண்டும் என்ற ஆசை இருந்தும் வாய்ப்பு இல்லாமல் இருப்பவர்களை ஊக்குவிக்கவே இந்த திட்டம்.
கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபயிற்சி மேற்கொள் வோர்கள் பெரிய எண்ணி க்கையில் இருந்தாலும் சாதாரண மக்களும் அதில் பங்கேற்று நடப்பதற்கு தான் இந்த திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
அரசு பல்வேறு திட்ட ங்களை செய்திருக்கும் நிலையில் இவை அனைத்துமே மக்கள் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு கிடைக்காமல் இரு க்கும் சில பிரச்சனைகளை தீர்ப்பதற்காக நடவடி க்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது.
நடப்போம் நலம் பெறுவோம் என்ற இந்த திட்டத்தை முழுமையாக பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 500 பேர் இதனை பயன்ப டுத்தினால் நிச்சயமாக ஆயிரம் பேர் பயன்படுத்து வதற்கான வாய்ப்புகள் இருக்கும். மற்ற நாட்களிலும் இதனை பயன்படுத்தி கொள்வதில் எந்த தவறும் கிடையாது.
இந்த நடைபயிற்சிக்கு அரசு சார்பாகவும் காவல்துறை சார்பாகவும் என்னென்ன உதவிகள் தேவையோ அதை செய்வார்கள். மக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
இந்த நடைபயிற்சியில், மாவட்ட ஆட்சியர் கிரந்திகுமார் பாடி, மேயர் கல்பனா, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், துணை மேயர் வெற்றி செல்வன், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் மாநகர் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை தலைவர் ரேஸ்கோர்ஸ் ரகுநாத் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu