கூட்டணிக்கு தலைமைதான் முடிவு.. குழப்பமே இல்லை: வானதி சீனிவாசன்
கோவை ராம்நகர் பகுதியில் பாஜக சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை வானதி சீனிவாசன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
Coimbatore news Today: நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தேசிய தலைமைதான் முடிவு செய்யும்; இதில் குழப்பமே இல்லை என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை ராம்நகர் பகுதியில் கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் தாகம் தீர்க்க பாஜக சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாஜக மகளிர் அணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், கோவையில் தற்போது குடிநீர் பிரச்சனையால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. நகரின் சில இடங்களில் 15 நாட்களுக்கு ஒருமுறை 30 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வருகிறது. சிறுவாணியில் நீர் குறைவாக இருந்தால் லாரிகள் மூலமாவது மக்களுக்கு குடிநீர் விநியோகிப்பதை அரசு உறுதி செய்திட வேண்டும். கோடை துவங்குவதற்குமுன்பே குடிநீர் பிரச்சனை மிகபெரிய பிரச்சனையாக மாறி வருகிறது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், அண்ணா மார்க்கெட் பகுதியில் சுமை தூக்கும் பணியாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் தகுந்த வசதியை செய்து தர வேண்டும். கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில் மத்திய அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசும் பொதுமக்களுக்கு தகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கடந்த அதிமுக ஆட்சியில் காவிரி டெல்டா பகுதிகளை ஏற்கனவே வேளாண் மண்டலமாக அறிவித்துள்ள நிலையில், அப்பகுதியில் நிலக்கரி சுரங்கள் அமைப்பது குறித்து மாநில அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
மேலும், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு, தேசிய தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும். இதில் எந்த ஒரு குழப்பமும் இல்லை என்று பதிலளித்தார்.
கலாச்சேத்ரா விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தான் முதலில் வந்ததாக தெரிவித்த அவர் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க முன்வர வேண்டுமென கேட்டுக்கொண்டார். மேலும் பல்வேறு இடங்களில் விசாகா கமிட்டி அமைக்கப்படாமல் உள்ளது. மாநில அரசு அனைத்து இடங்களிலும் விசாகா கமிட்டி உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டுமெனவும் கூறினார்.
ராகுல் காந்தி விவகாரத்தில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளதாகவும் இதற்கும் பாஜகவுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என தெரிவித்த அவர், சட்டம் அதன் கடமையை செய்து வருகிறது எனவும் இதற்கு பாஜக மீது பாய்வது என்பது முறையானது அல்ல எனவும், தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் மத்திய அரசு நிலக்கரி மற்றும் எரிபொருள் எடுப்பதற்கு அனுமதி வழங்குமாயின் அதிலிருந்து விளக்கு அளிப்பது குறித்து மாநில அரசு தான் மத்திய அரசுடன் இணைந்து பேச வேண்டும் என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu