திருவிழாவில் மோதிக்கொண்ட இளைஞர்கள்: 100 திருக்குறள் ஒப்புவிக்க சொன்ன போலீசார்

திருவிழாவில் மோதிக்கொண்ட இளைஞர்கள்: 100 திருக்குறள் ஒப்புவிக்க சொன்ன போலீசார்
X

திருக்குறள் ஒப்புவித்த இளைஞர்கள்.

இளைஞர்கள், சுமார் இரண்டரை மணி நேரம் திருக்குறளை மனப்பாடம் செய்து ஒவ்வொருவராக ஒப்புவித்தனர்.

கோவை மதுக்கரை அடுத்த மரப்பாலம் பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அப்போது ஜமாப் இசைக்கு ஏற்ப இளைஞர்கள் நடனமாடிக் கொண்டிருந்த போது, இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது இரு தரப்பும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இது குறித்த தகவலறிந்த போலீசார் உடனடியாக விரைந்து வந்து இரு தரப்பையும் சேர்ந்த 10 பேரைப் பிடித்து விசாரணைக்காக மதுக்கரை காவல் நிலையம் அழைத்து வந்தனர். இதையடுத்து, உதவி ஆய்வாளர் கவியரசன் தலைமையில் போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் 100 திருக்குறள்களை மனப்பாடம் செய்து ஒப்புவித்தால், வீட்டிற்கு செல்லலாம் என அறிவுறுத்தப்பட்டனர். இதையடுத்து இளைஞர்கள், சுமார் இரண்டரை மணி நேரம் திருக்குறளை மனப்பாடம் செய்து ஒவ்வொருவராக ஒப்புவித்தனர். இதையடுத்து அனைவருக்கும் அறிவுரை வழங்கிய காவல்துறையினர், அவர்களை எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!