கோவையில் கார், லாரி நேருக்கு நேர் மாேதி விபத்து: இருவர் உயிரிழப்பு

கோவையில் கார், லாரி நேருக்கு நேர் மாேதி விபத்து: இருவர் உயிரிழப்பு
X

கோவை ஈச்சனாரி அருகே உள்ள சிட்கோ தொழிற்பேட்டை முன்பு லாரியும் - காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

முதற்கட்ட விசாரணை மேற்கொண்டதில் காரில் பயணித்தது கடந்த 14ஆம் தேதி திருமணமான புது தம்பதிகள் என தெரியவந்தது.

கோவை ஈச்சனாரி அருகே உள்ள சிட்கோ தொழிற்பேட்டை முன்பு ஜல்லி ஏற்றி வந்த லாரியும் - காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விபத்தில் சிக்கி கொண்டவர்களை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலையே ஒருவர் பலியானார். மேலும் இருவரில் ஒருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து முதற்கட்ட விசாரணை மேற்கொண்டதில் காரில் பயணித்தது கடந்த 14ஆம் தேதி திருமணமான புது தம்பதிகள் என தெரியவந்தது.

இதில் புதுமாப்பிள்ளை ஷியாம், மற்றும் அவரது தாயார் மஞ்சுளா உயிரிழந்தும், புது மாப்பிள்ளையின் மனைவி சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமண நடந்த இரண்டே நாட்களில் புது மாப்பிளை உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!